search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ முகாம்"

    ராணுவ முகாம் அருகே மர்ம நபர்கள் சிலர் கையெறி குண்டை வீசி சென்றதை அடுத்து, அப்பகுதி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
    பதான்கோட்:

    பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் அமைந்துள்ள ராணுவ கன்டோன்மென்ட் அருகே இன்று திடீரென குண்டு வெடித்தது.  இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் அங்கு சோதனை நடத்தியதில், கையெறி குண்டுகளின் பாகங்கள் கிடப்பதை கண்டனர். இதன் எதிரொலியால், அப்பகுதி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    கையெறி குண்டு பாகங்கள்

    இதுகுறித்து உயர் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேந்திர லம்பா கூறுகையில், " ராணுவ கன்டோன்மென்ட்டின் திரிவேணி வாயில் முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்கள் கைக்குண்டை வீசிவிட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. அதனை ஆய்வு செய்து வருகிறோம்.

    இந்த கையெறி குண்டு வெடிப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும், அப்பகுதியில் உஷார்படுத்தப்பட்டுள்ளோம்.

    குறிப்பாக பஞ்சாபின் எல்லை மாவட்டங்களான பதான்கோட் மற்றும் குர்தாஸ்பூர், 2016 அன்று பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளம் மற்றும் அருகிலுள்ள ராணுவத்தின் மாமூன் கன்டோன்மென்ட்  உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
     
     குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பஞ்சாப் காவல்துறையைத் தவிர, எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் பணியாளர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதையும் படியுங்கள்.. ஜீன்ஸ் பேண்டில் மறைத்து ரூ.2.13 கோடி தங்கம் கடத்திய வாலிபர்கள் கைது
    காஷ்மீரில் தீவிரவாதிகள் மிரட்டலால் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டு தற்போது ராணுவ முகாமாக மாறியுள்ளது. #Kashmir #theater
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் பல்வேறு வகையில் அட்டூழியம் செய்து வருகிறார்கள். மக்கள் மீது பல்வேறு அடக்கு முறைகளை விதித்துள்ளனர்.

    குறிப்பாக காஷ்மீரில் கேளிக்கைகளை தடை செய்தனர். இதன் காரணமாக கடந்த 1990-ம் ஆண்டு முதல் காஷ்மீரில் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 12 தியேட்டர்களே இருந்தன. அவை மூடப்பட்டதால் எந்த சினிமா படங்களும் திரையிடப்படவில்லை.



    மாநில அரசு ஸ்ரீநகரில் மட்டும் சில தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுத்தது. ஆனால் பயத்தால் யாரும் தியேட்டருக்கு படம் பார்க்கவரவில்லை. இதையடுத்து திறக்கப்பட்ட தியேட்டர்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் இந்த தியேட்டர்களை பாதுகாப்பு படையினர் கைவசம் எடுத்துக் கொண்டு அதை ராணுவ முகாமாக மாற்றினர்.

    தற்போது பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு தங்கி உள்ளனர். #Kashmir #theater
    மாலி நாட்டில் ஆப்ரிக்க ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் உயிரிழந்தனர். #Mali #Africanmilitarybase

    பமாகோ:

    ஆப்பிரிக்க நாடான மாலியில் தியூரக் பயங்ரவாதிகளை ஒடுக்க கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஐ.நா. அமைதிப்படை முகாமிட்டுள்ளது. அதோடு மற்ற சில ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த ராணுவத்தினரும் பயங்கரவாதிகள் ஒடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    மத்திய மாலி பகுதியில் உள்ள செவாரி நகரில் ஆப்ரிக்க ராணுவ முகாம்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள முகாம்கள் மீது பயங்கரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

    மேலும் வெடிகுண்டு நிரப்பிய கார்களை முகாம்கள் மீது மோதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களால் ராணுவ முகாமில் இருந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

    இந்த தாக்குதலில் ஆறு பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமானோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Mali #Africanmilitarybase
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிபோராவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் ஹஜ்ஜன் காவல் நிலையம் அருகில் ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது

    இந்நிலையில், நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் பயங்கரவாதிகள் சிலர் இந்த ராணுவ முகாம் மீது கையெறி குண்டுகளை வீசினர். அதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

    இந்த தாக்குதலில் சேத விவரங்கள் வெளியாகவில்லை. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    ×